Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் இங்க குளிக்க கூடாது… சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் கோபால் மகன் கவினுடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க சென்ற போது கவின் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினான். அப்போது மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவினை பிணமாக மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் குளிக்க மற்றும் துணி துவைக்க கூடாதென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |