Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… வாளிக்குள் தலைகுப்புற விழுந்த சிறுவன்…. தென்காசியில் பரபரப்பு….!!

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஆரோன்தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் காரணத்தால், தங்களுடைய மூன்று குழந்தைகளையும் வீட்டில் தனியாக விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு அவரது இரண்டு மகள்களும் வீட்டின் பக்கத்தில் விளையாடியுள்ளனர்.

அப்போது இவர்களுடைய மகன் ஆரோன்தாஸ் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வீட்டில் தண்ணீர் இருந்த வாளிக்குள் தலைகுப்புற விழுந்து விட்டான். இதனையடுத்து கற்பகம் மதிய உணவு இடைவேளையில் தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது மகன் வாளிக்குள் தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவனை உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |