Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்துவிட்டது… பந்தை எடுக்க சென்ற போது… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன்  இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு இமானுவேல் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பந்தானது மாடியில் விழுந்துள்ளது. அப்போது அதனை எடுப்பதற்காக மாடிக்கு சென்ற சிறுவன் அங்கிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் மிகவும் படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதற்கு பின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிராங்கிளின் தனது குடும்பத்துடன் மும்பைக்கு திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தபோது தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Categories

Tech |