Categories
உலக செய்திகள்

பசியுடன் திரிந்த கரடி சிறுவனை தின்ற கொடூரம்.. சுற்றுலா பயணிகளை பதற வைத்த சம்பவம்..!!

சைபீரியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்கிய கரடி சிறுவனை தாக்கி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தின் தேசிய பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது. அதன் பின்பு 16 வயதுள்ள ஒரு சிறுவனை தாக்கி பாதி தின்றுள்ளது. எனவே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த கரடியை கத்தியால் குத்தியுள்ளார்.

அதன்பின்பு அங்கிருந்த மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்துள்ளனர். எனினும் துப்பாக்கியுடன் வந்த காவலர்களை பார்த்தவுடன் கரடி காட்டுப்பகுதிக்குள் தப்பிவிட்டது.

எனினும் பல மணி நேரம் போராடி காவலர்கள் கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர். பூங்காவில் உள்ள நிர்வாகிகள், அந்த கரடிக்கு தேவையான உணவு கிடைக்காததால் இவ்வாறு தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |