Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில், ராமசாமியாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த சாந்தி-சேகர் என்ற தம்பதியினரின் மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் அருகில் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தான். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை அச்சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தன்னுடன் விளையாட வரும் சிறுவர்கள் தன்னை பல மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர்களை  சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.`

Categories

Tech |