Categories
உலக செய்திகள்

“கஞ்சா வைத்திருந்த தந்தை!”.. மகன் செய்த செயல்.. மயங்கி விழுந்த சிறுவன்..!!

ஜெர்மனியில் ஒரு சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை எடுத்து நண்பர்களோடு சேர்ந்து  தீ வைத்து எரித்திருக்கிறார்.

ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை பார்த்துள்ளார். எனவே அதனை திருடிச்சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து தீ வைத்து எரித்திருக்கிறார். அப்போது தீயிலிருந்து வந்த புகையால் ஒரு சிறுவன் மயக்கமடைந்து விட்டார்.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின்பு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அச்சிறுவனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அந்த சிறுவனின் தந்தை போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறாரா? என்பதை அறிய பரிசோதனை செய்துள்ளனர். அந்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |