12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பாலமுருகன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சகோதரர் போல பழகி வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை தெரிவித்ததால் பாலமுருகனிடம் பேசுவதை அந்த மாணவி நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பாலமுருகன் எனது செல்போனில் இருக்கும் உனது வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அந்த மாணவியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.