காதலனை பார்க்க அறைக்கு காதலி சென்றபோது அங்கு வேறு ஒரு பெண் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி எச்டி படிக்கும் ஒரு பெண் தன் காதலன் உடன் சண்டை ஏற்பட்டதால், அவரை சமாதானப்படுத்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த காதலனும் அவருடன் இருந்த பெண்ணும் காதலியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்து பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.