லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சிறுவர்கள் இருவரை குத்திக்கொலை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டனில் உள்ள Woolwich New என்ற பகுதியில் நேற்று மாலையில் 15 வயதுடைய ஒரு சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இச்சிறுவனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அப்போது தன் கையில் இருந்த குடையை வைத்து சமாளித்து பார்த்துள்ளார். எனினும் இரண்டு கத்திகளை வைத்து பல தடவை குத்தியுள்ளனர்.
அதன்பின்பு, காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர். எனினும் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நடந்து சுமார் 7 மணி நேரங்கள் கழித்து மற்றொரு சிறுவன் Lambeth, என்ற நகரில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மருத்துவ உதவி குழுவினருடன் காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனை பரிசோதித்து பார்த்தத்தில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை 2 சம்பவங்கள் தொடர்பில் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.