Categories
தேசிய செய்திகள்

பிஎப் சந்தாதாரர்களே! இனி PF பிரச்சினையை…. வாட்ஸ் அப்பிலேயே சரி செய்யலாம்…!!

பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO சார்பாக குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் மூலமாக செய்யப்படும் சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசதியின் மூலமாக பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட வாட்ஸ்அப் நம்பர் இருக்கிறது. இந்த நம்பர்களை EPFO அமைப்பின் வலைதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

கொரோனா வந்த பிறகு பிஎஃப் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று வரிசையில் காத்து கிடைப்பது சிரமமாக இருப்பதால் வாட்ஸ்அப் சேவை வாடிக்கையாளர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளத்தில் சென்று ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள பிரத்தியேகமான வாட்ஸ்அப் நம்பரை தெரிந்து கொள்ளமுடியும். வாட்ஸ்அப் நம்பரை உங்களுடைய செல்போனில் பதிவு செய்த பிறகு வாட்ஸ் அப்பில் அந்த நம்பரை சேட் மூலமாகவே உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த வாட்ஸப் குறை தீர்க்கும் மையமானது பிஎஃப் அமைப்பில் 138 பகுதிகளிலும் அமலுக்கு வந்துள்ளது.

அம்பத்தூர் – 6380131921

சென்னை (வடக்கு) – 9345750916

சென்னை (தெற்கு) – 6380366729

தாம்பரம் – 6380153667

கோயம்புத்தூர் – 9994255012

மதுரை – 9489938487

நாகர்கோவில் – 6381122366

சேலம் – 9080433650

திருநெல்வேலி – 9489987157

திருச்சி – 6380109286

வேலூர் – 7397593330

Categories

Tech |