செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மெட்ராஸ் டான் ஜெயக்குமாரை பற்றி தான், நான் பலமுறை அவரிடம் கூறியிருக்கிறேன் வெயில் அதிகமாக இருக்கின்ற நேரத்தில் பிரஸ் மீட் பண்ணாதீர்கள். மெட்ராஸ் வெயில் உச்சியில் அடிக்கும் தலையில், அங்கு உங்களுக்கு பாதுகாப்பதற்காக தொப்பி எதுவும் கிடையாது, அந்த வெயில் நேர உள்ள போச்சுன்னா, இப்படித்தான் உளறுவீர்கள் என்று நான் முதலில் கூறியிருக்கிறேன்.
அவர் நம் பேச்சை கேட்பதில்லை. பிரஸ் மீட் செய்கிறேன் என்று சொல்லி, ஒரு தராதரம் கீழே போய் பேசுகிறார், கட்சியில் பார்க்கிறீர்கள்… வைத்தியலிங்கம் பேசுகிறார், ஜே சி டி பிரபாகரன் பேசுகிறார். ஜேடிசி பிரபாகரன் யாராக இருக்கட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்கள், என்றைக்காவது தவறாக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் இடமிருந்து சின்ன வார்த்தை வருகிறதா என்று பாருங்கள் ? இப்போது தான் இந்த கவர்மெண்ட் எஃப்.ஐ.ஆர் ஐ போட்டுள்ளது, எனக்கு தெரிந்து அரசியல் வாழ்வில் இதுதான் முதல் தகவல் அறிக்கை அண்ணன் மேல போட்டது.
அதிமுக அலுவலகம் கோவிலாம் அவர் சொல்லுகிறார், அதற்குள் வந்து காலை புதைத்து உடைத்துவிட்டார்கள். நானும் தான் கூட இருந்தேன், என் மேலையும் எஃப் ஐ ஆர் போட்டாச்சு. அது கவலை இல்லை. ஏனென்றால் என் மீது செடிசன் கேஸ் போட்டாரு பழனிசாமி, என் மேல் சேலத்தில் போட்டார். நாங்கள் இரண்டு கேள்வி தான் கேட்கிறேன், கோவில் தானே… தலைவரும், அம்மாவும் இருக்கின்ற இடம் தானே, ஏன் பூட்டி வைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.