உணவுக்காக பொதுமக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் வறுமை என்ற நிலை இல்லாமல் இருந்தது. கொரோனா பரவலுக்கு முன்னர் வரை இலவச உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தின் முன்பு 300 பேர் காத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் ஆவர். அந்நாட்டில் முதல் கொரோனா அலை ஏற்பட்டபோது 67 மில்லியன் மக்களுக்கு தலா 83% மாதந்தோறும் நிதி உதவியாக வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அந்நாட்டின் ஜனாதிபதி கடைசிவரை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். பின்னர் கடும் நிர்ப்பந்தம் காரணமாகவே அதற்கு அனுமதி அளித்துள்ளார். அதன் பின் குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதற்க்கு தடையும் விதித்தார். ஆனால் பொதுமக்களின் கோபத்திற்கு பயந்து தற்போது மீண்டும் அந்த திட்டத்தை அறிமுகம் செய்தாலும் உதவித்தொகையை சரிபாதியாக குறைத்துள்ளார். மேலும் பிரேசில் நாட்டில் சுமார் 60 சதவீதம் மக்கள் ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.