பிரேசில் அரசு டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பிரேசில் நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலி தடை செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது, டெலிகிராம் நிறுவனமானது, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், தவறாக பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் டெலிகிராம் செயலுக்கு அதிரடியாக தடை அறிவித்திருக்கிறது அதன்படி, பிரேசில் நாட்டில் மக்கள் இனிமேல் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.