தினசரி இறப்பு எண்ணிக்கை மட்டுமே வெளியிடுவோம் என பிரேசில் தெரிவித்ததற்கு நீதிமன்றம் மொத்த இறப்பு எண்ணிக்கையை வெளியிட உத்தரவிட்டுள்ளது
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் ஏராளமான நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக பிரேசிலிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் தொற்றை தடுக்க பிரேசில் தவறியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்நிலையில் பிரேசில் அரசு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புதிய முறையில் வெளியிடப் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
அதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை வெளியிடாமல் தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது. இந்த முடிவிற்கு உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பு உருவானது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பழைய முறையிலேயே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .
இதனையடுத்து இன்று மீண்டும் மொத்த இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டது. அதோடு உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேற போவதாகவும் அந்நாட்டு பிரதமர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்திருந்தார். இதனிடையே கொரோனா ஒரு சிறிய தொற்று இதற்காக மக்களை வீட்டில் அடைத்து வைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்யக்கூடாது என இவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.