Categories
உலகசெய்திகள்

போர்க்களம் போல் காட்சியளிக்கும் பிரபல நாடு…. “அவர்” தான் முழு காரணம்…. அதிபரின் குற்றச்சாட்டு…!!!

பிரேசில் உலகில் 4-வது மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜெயீர் அரசு மக்களிடம் விமர்சனங்களையும், கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி ஜெயீர் 49.10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னால் அதிபரான லுலு டா சில்வா 50.90 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து ஜெயீர் தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஜெயீர் ஆதரவு பழங்குடி தலைவரான ஜோஸ் அகாசியோ என்பவர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பொதுமக்களை தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. சிலர் வன்முறையில் இறங்கி வாகனங்களை தீயிட்டு கொளுத்தி, பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். மேலும் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாட்டின் பல்வேறு இடங்களில் நிலைமை போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதற்கு ஜெயீர் தான் முழு காரணம் என தற்போதைய அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |