Categories
உலக செய்திகள்

கோர விபத்தில்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்…. சிசிடிவியில் பதிவான காட்சிகள்….!!

பிரேசிலில் பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். 

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ நகரில் கண்மூடித்தனமாக வந்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்த காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 வயது சிறுவன் ஒருவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டுள்ளான். அதுமட்டுமின்றி பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் காரில் பயணித்த பயணிகள் மிகவும் பதற்றத்துடன் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் காரிலிருந்து தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்த சிறுவன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியின் சாலையோரம் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |