பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.
பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அந்த அழகி, ஆடைகளின்றி நிர்வாணமாக அங்கிருந்து தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.