பிரேசில் நாட்டின் சில நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் தனது இரட்டை பெண் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டுவிட்டு பக்கத்து வீட்டாருடன் கதை பேசுவதற்காக சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் பிஞ்சு குழந்தைகளை பதம் பார்த்து விட்டது.
ஆம், குழந்தைகள் இரண்டும் நாய் கடித்த உடன் அலறியது.இந்த சத்தம் கேட்டு 26 வயதுடைய தாயார் எலைன் நோவாஸ் அதிர்ச்சியடைந்து வீட்டுக்கு விரைந்து வந்து பார்க்கும்போது அந்த நாய் பிஞ்சு குழந்தைகள் இருவரையும் கொடூரமாக தாக்கிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன தாயார் நோவாஸ் நாயை துரத்திவிட்டு உடனடியாக தனது மகள்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முன்னரே ஒரு குழந்தை இறந்து விட்டது என கூறியுள்ளனர்.. மற்றொரு குழந்தை மிகக்கொடூரமாக பாதிக்கப்பட்ட நிலையில், அதுவும் மாரடைப்பால் சில நிமிடத்தில் மரணம் அடைந்தது.
பிஞ்சுக் குழந்தையின் மரணத்துக்கு காரணமான அந்த நாய் இதற்கு முன்புவரை பாசத்துடன் அன்பாகவும் மென்மையுடனும் நடந்து கொள்ளும் என்கிறார் உறவினர்களில் ஒருவர்.. இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின்பே அந்த நாய்க்கு பொறாமை குணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என உறவினர்கள் கூறுகின்றனர்.. இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த நிலையில் தற்போது அதிர்ச்சியில் மீளமுடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார் தாயார் நோவாஸ்.இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து 26 நாட்களே ஆன நிலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நாய் குடும்பத்தினருடன் மிகவும் சந்தோஷமாக சாந்தமான குணத்தில் இருந்து வந்துள்ளது.. ஆனால் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்தே நாய் தன்னுடைய உரிமையாளர்களிடமிருந்து பாசத்தை இழந்து விட்டதன் காரணமாக பொறாமைப்பட்டு இப்படி செய்ததாக நம்பப்படுகிறது.