பிரேசில் அதிபர் போல்சனாரோ அமேசான் காடுகள் அழிப்பிற்கு மரப்பொருட்களுக்கான தேவை அதிகரிப்பே காரணம் என்று கூறியுள்ளார்.
பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் அமேசானில் சுமார் 13,235 சதுர கி.மீ காடுகள் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஓராண்டு கால கட்டத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அமேசான் காடுகள் அழிவிற்கு சர்வதேச அளவில் மரம் மற்றும் மரப்பொருள்களின் தேவை அதிகரிப்பே காரணம் என்று பிரேசில் நாட்டின் அதிபர் போல்சனாரோ கூறியுள்ளார். அதேசமயம் அதிபர் போல்சனாரோ அமேசான் காடுகள் அழிப்பு தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும் அந்த ஆய்வின் முடிவுகளில் கூறப்பட்டுள்ளபடி காடுகள் அழிக்கப்பட்டிருந்தால் தற்போது அமேசான் காடுகள் பாலைவனமாக தான் மாறி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் அமேசான் காடுகள் அழிப்பிற்கு காடுகள் எரிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அரசின் மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே பழிசுமத்துவதாக கூறி குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.