பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் பிரேசில் சுகாதார அமைச்சகம், “பிரேசிலில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,75,000-த்தை தாண்டி உள்ளது” என்று கூறியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,663 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 363, 389-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2216 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,105-ஆக உயர்ந்துள்ளது .
இதற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் அந்த இடத்தை பிடித்துள்ளது. 2 9.32 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட அமெரிக்கா தான் இந்த பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.