கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளது. அதன்படி வரலாற்றுச் சாதனையாக கடலூரில் இந்த கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் பெய்த கனமழை புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். அதாவது கடலூரில் 19 சென்டிமீட்டர் பதிவாகியுள்ள இந்த கனமழை ஆனது 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி கடலூரில் 11.9 சென்டிமீட்டர் பெய்த அதிகபட்ச மழை என்ற சாதனையை 91 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்து விட்டது.
எனவே ஒரே நாளில் கடலூரில் 19 சென்டிமீட்டர் மழை என்பது கடுமையான மழை பொழிவு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி மாதத்தில் மழை பெய்யுமா என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவதற்கு, இந்த மழையானது வளிமண்டல சுழற்சி அல்லது வடகிழக்கு பருவத்தில் நீட்சியாகவே காணப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதோடு வடகிழக்கு பருவமழை போன்ற வானிலை தமிழகத்தின் பல இடங்களில் நிலவும் எனவும் கூறியுள்ளார்.