Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக தலைவராய் மீண்டும் மகுடம் பூண்ட முதலமைச்சரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரைத்தேன். எருது போல் உழைப்பு, ஏழை போல் உணவு, திராவிடர் தினவு, தீராத கனவு, கவலை ஏன் உனக்கு? கால் மாட்டில் கிழக்கு, சுழல்வாழ் எடுத்து, சூழ்ச்சியை உடைத்து, ரௌத்திரம் படைத்து, ராஜாங்கம் நடத்து என்று பதிவிட்டுள்ளார் ‌

Categories

Tech |