அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
மேலும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப்படும். அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.