மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Categories