Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking:சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலி என தகவல்..!!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்த 70 வயது மருத்துவர் உள்பட 10 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியான கீழ்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மருத்துவர், மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று உயிரிழந்தனர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த 56 வயது ஆண், ஏழுகிணறை சேர்ந்த 68 வயது முதியவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டேரி முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை சூளையைச் சேர்ந்த முதியவர், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐசிஎப் பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. நேற்று மட்டும் தமிழகத்தில் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள இறப்புகள் விகிதம் 0.884% ஆக உயர்ந்துள்ளது. அதில் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் இன்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Categories

Tech |