Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING:சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்ற சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நேற்று தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |