தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோரின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.நகை கடன் தள்ளுபடி குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த அவர் இதுவரை சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் உறுதிமொழி பத்திரம் தந்தால் மேலும் ஒரு லட்சம் பேரில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.