முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மானாமதுரை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.