அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்..
கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கான தடை அமலில் இருந்தது.. தற்போது வரையில் அந்த தடை அமலில் இருக்கிறது.. இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிதாக சுற்றுலா விசா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவ.15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..