தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories