தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.காலாண்டு தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதனை தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.