அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சோனித்புர் பகுதியில் சற்று முன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் பல கட்டிடங்கள் அசைந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அனைவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
Categories