நடிகர் அஜித்தின் அடுத்த படத்திற்கு ‘துணிவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித்தின் 61-வது திரைப்படத்திற்கு துணிவு என்ற பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித்தின் 61வது படத்தை இயக்குகிறார் எச் வினோத். அஜித்தின் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை நீரவ்ஷா மேற்கொள்கிறார்… இந்த போஸ்டரில் அவர் நாற்காலியில் கண்ணாடி போட்டுக்கொண்டு சாய்ந்து அமர்ந்துள்ளவாறு கையில் துப்பாக்கியை வைத்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..
#Thunivu #NoGutsNoGlory#AK61FirstLook #AK61 #Ajithkumar #HVinoth
@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit @anandkumarstill pic.twitter.com/Mb7o0fuGTT— Boney Kapoor (@BoneyKapoor) September 21, 2022