Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: அடித்து ஓட விட்ட இந்திய அணி…. கொண்டாட்டம்….!!!!

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் என நான்கு வேகங்கள் சேர்க்கப்பட்டனர்.

சுழலில் ஜடேஜா மட்டும் இடம் பெற்றார். இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ், தனது 75 வது டெஸ்டில் களமிறங்கினார்.இதில் இங்கிலாந்து அணி 183 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஜோ ரூட் அதிக பட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4, சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Categories

Tech |