வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு இலங்கையில் கரையை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி குமரி கடல் பகுதியை அடையும். புயல் எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் முகாம்களுக்கு செல்லலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புயல் பற்றிய இந்த அறிவிப்பு பொதுமக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.