தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இடி முன்னுருடன் கூடிய மழை பெய்யும். எனவே வெளியில் செல்பவர்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்,மழைநீர் தேங்கியுள்ள பள்ளம் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.