Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…!!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 30 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது..

Categories

Tech |