தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.
அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் அனைவரும் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மழை காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.