ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், ராஜஸ்தானிலும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் நாளை நடைபெறும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories