நடிகர் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். தற்போது ரஜினி சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.