பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக கட்சித் தொண்டர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அடுத்த முறை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை உடல் நலம் பெறவேண்டி கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட @BJP4TamilNadu கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை;
— K.Annamalai (@annamalai_k) November 25, 2022