Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்.!!

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவின் தற்காலிகத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு செயற்குழுவில் ஓபிஎஸ் – இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..

கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பையும் தமிழ்மகன் உசேன் வகித்துள்ளார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ்மகன் உசேன் கட்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |