அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக இருக்குமா என அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கில்கள் டி எஸ் வைத்தியநாதன், ஆரியமா சுந்தர், விஜயநாராயணன், வக்கீல் நர்மதா சம்பத் போன்றவர்கள் எல்லாம் இறங்கி வாதாடினார்கள்.
அதேபோல ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மூன்று தரப்பினரும் தங்கள் தரப்பில் இருக்கக்கூடிய நியாயங்கள், வாதப்பிரதிவாதங்களை எல்லாம் கடுமையாக எடுத்து வைத்தார்கள். ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று ஒரு தரப்பும், செல்லாது என மற்றொரு தரப்பும் தங்கள் தரப்பும் ஆதாரங்கள் போன்றவற்றையெல்லாம் கையில் கொடுத்து, வாதாடி இருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலே இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 10:30 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு தரப்பு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் கட்சியினருமே இதனை உற்றுநோக்கி காத்திருக்கிறார்கள். காரணம் தமிழ்நாட்டின் உடைய பிரதான கட்சி என்ற அடிப்படையிலும், தமிழ்நாட்டினுடைய பெரிய எதிர்க்கட்சி என்ற அடிப்படையிலும் அதிமுகவினுடைய இந்த வழக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்வதாக மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும் எனவும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.