கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை இன்று அறிவித்தது.
இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் சாதி, மதம் பார்ப்பதில்லை. கட்சிக்கு ஊறு விளைவித்தவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.