Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் நாளை மறுநாள் கடைசி நாள்… திடீர் திருப்பம்…!!!

தமிழகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமான மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. விருப்ப மனு அளிக்க மார்ச் 5ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக மார்ச் 3ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தேதிக்கு பிறகு காலக்கெடு அவகாசம் மீண்டும் நீட்டிக்க படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |