தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு வினியோகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். மாவட்ட அதிமுக அலுவலகங்களில் நவம்பர் 29 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி கவுன்சிலர் ரூபாய் 5000, நகராட்சி கவுன்சிலர் ரூ.2500, பேரூராட்சி கவுன்சிலர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். அதிமுகவை வெல்ல தமிழ்நாட்டில் எந்தவொரு சக்தியும் இல்லை என்று கூறியுள்ளார்.