பெரும் பரபரப்புக்கு மத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கவுள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு புறப்பட்டு சென்றார். இதனிடையே அதிமுக பொது குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்(காலை 9 மணி) உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு இபிஎஸ் புறப்பட்டு செல்கிறார். அதே சமயம் ஓபிஎஸ் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். அதிமுக அலுவலகம் முன்பு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். இதில் ரத்தக்கரை படிந்த வாகனத்துடன் வந்தார் ஓபிஎஸ். பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கலவரங்களுக்கு இடையே ஓபிஎஸ் அலுவலகத்துக்குள் தற்போது நுழைந்துள்ளார். அதிமுக கொடியை உயர்த்தி பிடித்து ஓபிஎஸ் உள்ளே சென்றுள்ளார்.