தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் 2018 இல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுகின்றன என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எல்கேஜி, யுகேஜி க்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சமூகநலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூகநலத்துறை உதவியுடன் எல்கேஜி, யுகேஜிக்கு பதில் அங்கன் வாடிகளில் மழலையர் வகுப்புகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியுள்ளது.