தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதன்படி அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனு தாககல் செய்யப்படும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 2018ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கே சி பழனிச்சாமி எப்படி வழக்கு தொடர முடியும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.