தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பங்களும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. மேலும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவிற்கு அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால் அதிருப்தி இருந்தது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை என்று அதிமுகாவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேட்டியளித்துள்ளார். தாங்கள் முதலில் 41 இடங்கள் கேட்டோம். ஆனால் தற்போது 23 தொகுதிகள் வரை இறங்கி வந்தோம். மேலும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளித்துள்ளனர். நாளை அல்லது அதற்கு மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.